[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா
  • BREAKING-NEWS கட்சி அலுவலகத்திலுள்ள ஜெயலலிதா சிலையின் முகம் சீரமைக்கப்படும் என முதல்வர் உறுதி - மாஃபா பாண்டியராஜன்

கூல் கேப்டன் தோனியும் பலமுறை கோபப்படுவார்: சுரேஷ் ரெய்னா

suresh-raina-reveals-how-ms-dhoni-managed-captain-cool-image

கூல் கேப்டன் தோனியும் மைதானத்தில் பலமுறை கோபப்படுவார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. 'மகேந்திர சிங் தோனி' என்பது தான் இவரது பெயர் என்றாலும் ரசிகர்கள் இவரை 'தல', 'கூல் கேப்டன்', 'எம்.எஸ்.டி' என்று பல பெயரிட்டு செல்லமாக அழைக்கின்றனர். விளையாடும்போது மைதானத்தில் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதை மிகவும் எளிமையான முறையில் கையாளுவார். நிதானத்தை இழக்கமாட்டார். அதனாலேயே இவரை செல்லமாக 'கூல் கேப்டன்' என்றும் அழைத்தனர்.

இந்நிலையில் தோனி தலைமையிலான இந்திய அணியில் ஏகப்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, " தோனி என்ன நினைக்கிறார் என்பதை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாது. அவரது கண்கள் எந்தவித உணர்ச்சியையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தாது. சன்கிளாஸ் அணியவில்லை என்றாலும் கூட, தோனியின் பார்வையை கணிப்பது கடினம். ஆனால் தோனிக்கும் மைதானத்தில் நிறைய முறை கோபம் வரும். அதனை நீங்கள் பார்த்திருக்க முடியாது. காரணம், கேமரா எப்போது ஆனில் இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தோனியிடம் தலைசிறந்த தலைமை பண்பு இருக்கிறது. அடுத்த என்ன நடக்க போகிறது என்பதை முன்பே கணித்துவிடுவார். அதற்கேற்ப தயாராகியும் விடுவார். எப்போதும் எதற்கும் தன்னை தயாராக வைத்திருப்பார். ஒரு இரவு முன்பே உத்திகளை யோசித்து வைத்து மைதானத்தில் அதனை சரியாக பயன்படுத்துவார், தோனியின் தலைமை பண்பை கண்டு நிறைய முறை வியந்திருக்கிறேன்" என்றார். கூல் கேப்டன் தோனிக்கும் மைதானத்தில் கோபம் வரும் என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுக்கும் விஷயம்தான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close