[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது
  • BREAKING-NEWS புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே?- உயர்நீதிமன்றம்

கஷ்டம் பழகிவிட்டது: முரளி விஜய்

i-am-happy-and-comfortable-in-my-space-vijay

‘அணியில் வாய்ப்பில்லாமல் உட்கார்ந்திருக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கும்’ என்று தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறினார்.

கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ராகுலும் விளையாடியதால் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. பிறகு தவான், தனிப்பட்ட காரணத்திற்காக 2வது டெஸ்டில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக களம் இறங்கிய விஜய், நாக்பூர் டெஸ்டில் நேற்று சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய முரளி விஜய், ’வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். வாய்ப்பு கிடைக்கும் போது, மனரீதியாக வலுவாக இருப்பதும் முக்கியம். வாய்ப்பில்லாமல் உட்கார்ந்திருக்கும்போது, கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் பழகிவிட்டது. அணியில் எனக்கு பிரச்னையில்லாத இடம் வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எனது வேலையை சரியாக செய்கிறேன் என்று அர்த்தம். அணியில் இடம் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாளை நடப்பது பற்றியோ, அடுத்த போட்டி பற்றியோ எப்போதும் நினைப்பதில்லை. இப்போது என்ன செய்கிறோம் என்பதை பற்றி மட்டுமே நினைக்கிறேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close