[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ஸ்மித் அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது ஆஸ்திரேலியா

smith-defies-england-as-australia-fight-back-in-ashes

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சரிவை நோக்கிச் சென்ற ஆஸ்திரேலிய அணியை அரைசதம் அடித்து கேப்டன் ஸ்மித் மீட்டார். 

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் பிரிஸ்போன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. மேற்கொண்டு 106 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணி எஞ்சிய விக்கெட்களை பறிகொடுத்தது. 

இங்கிலாந்து அணியில் வின்ஸ் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்தார். ஸ்டோன்மேன் 53, மாலன் 56 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 76 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து‌ தடுமாறியது. அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 64 ரன்களுடனும், மார்ஷ் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close