[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தது இலங்கை: 205-ல் ஆல் அவுட்

ashwin-jadeja-hand-india-advantage-on-11-wicket-day

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின், ஜடேஜாவின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளமானது முதல் இரண்டு நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும், அஸ்வின், ஜடேஜா அற்புதமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல், இஷாத் சர்மாவும் அற்புதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தார்.

      

இலங்கை அணி 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இலங்கை அணியில் கருணரத்னே 51, சண்டிமால் 57, டிக்வில்லா 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா, இஷாத் சர்மா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

     

இதனையடுத்து, விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் எடுப்பதற்குள் கே.எல்.ராகுலின் விக்கெட்டை பறிகொடுத்தது. காமஜ் பந்துவீச்சில் போல்டாகி ராகுல்(7) வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close