[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றமா?: நிர்வாகக் குழு இன்று ஆலோசனை

shifting-ipl-ipl-board-meets-today

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ரைசிங் புனே அணிகளிடம் கருத்துக் கேட்கப்பட உள்ளது. போட்டிகளை வேறு எந்த இடத்திற்கு மாற்றலாம் என்பது குறித்தும், வேறு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா எனவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிராவில் நிலவும் வறட்சியைக் காரணம் காட்டி, ஏப்ரல் 30-க்குப் பிறகு அந்த மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் நாக்பூர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவிருந்த 19 போட்டிக‌ளில், 13 ஆட்டங்களை வேறு இடத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close