[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

இரண்டே ரன்னில் ஆல் அவுட் ஆன கிரிக்கெட் அணி!

nagaland-u-19-girls-2-all-out-in-17-overs-with-9-ducks

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருக்கிறது. அதில் இப்படியொரும் சாதனை நிகழ்ந்திருக்கிறது. அதாவது வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சாதனை படைத்திருக்கிறது இந்த கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி  நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் நாகலாந்து மற்றும் கேரள அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜேகேசி கல்லூரி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நாகலாந்து அணி, வெறும் இரண்டில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அதிலும் ஒரு ரன் மட்டுமே அடித்து எடுக்கப்பட்டது. நாகலாந்து கேப்டன் மேனகா 18 பந்துகளை சந்தித்து அந்த ஒரு ரன்னை எடுத்தார். இன்னொரு ரன், வைடுக்காக கிடைத்தது. மற்ற அனைவருமே டக் அவுட். 
கேரளா தரப்பில் கேப்டன் மின்னு மணி நான்கு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

‘நாகலாந்து அணி சிறந்த கிரிக்கெட் அணி இல்லை. அந்த அணி குறைந்த ஸ்கோரையே எடுத்து வருகிறது. இருந்தாலும் வெறும் 2 ரன்னில் அந்த அணியை வீழ்த்தியது சிறப்பான ஒன்றுதான்’ என்றார் கேரள பயிற்சியாளர் சுமன் சர்மா.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close