[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
விளையாட்டு 24 Nov, 2017 10:40 AM

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து ஆல்-அவுட், தடுமாற்றத்தில் ஆஸி!

australia-battle-back-as-england-rue-missed-opportunities

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 302 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக குக், ஸ்டோன்மேன் களம் இறங்கினர். 3வது ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் குக் (2 ரன்) கேட்ச் ஆனார்.

தொடர்ந்து வின்ஸ், ஸ்டோன்மேனுடன் இணைந்தார். இங்கிலாந்து அணி 29 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் அரை சதத்தை எடுத்தனர். ஸ்கோர் 127 ரன்னாக உயர்ந்த போது ஸ்டோன்மேன் (53 ரன்) கம்மின்ஸ் பந்து வீச்சில் போல்டானார். அடுத்து, கேப்டன் ஜோ ரூட் வின்ஸுடன் இணைந்தார். வின்ஸ், 83 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஜோ ரூட் 15 ரன்னில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மலனும், மொயீன் அலியும் களத்தில் இருந்தனர். 

2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மலன் 56 ரன்களும் மொயின் அலி 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் வரிசையாக நடையை கட்டினர். இதையடுத்து இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லியான் 2 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. பென்கிராப்டும் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சில் பென்கிராப்ட் 5 ரன்னின் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். வார்னர் 26 ரன், கவாஜா 11 ரன்களில் அவுட் ஆக, ஆஸ்திரேலிய தடுமாறி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித்தும், ஹெண்ட்ஸ்கோம்பும் ஆடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close