[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு இரண்டாவது வெற்றி

ipl-cricket-gujarat-won

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‌7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 21 ரன்கள் எடுத்தார். பின்னர் டு பிளஸ்ஸி- யுடன் இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்த பீட்டர்சென் 37 ரன்கள் எடுத்தார். டு பிளஸ்ஸி 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசி வெளியேறினார். கடைசி கட்டத்தில் வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் தாம்பே, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய குஜராத் அணிக்கு, மெக்கல்லம், ஆரன் பின்ச் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 85 ரன்கள் சேர்த்தனர். பின்ச் 37 பந்துகளில் 50 ரன்கள் விளாசி வெளியேறினார். மெக்கல்லம் 31 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதன்பின்னர் ரெய்னா, பிராவோ ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்த்தனர். ரெய்னா 24 ரன்கள் எடுத்தார். இதனால் குஜராத் அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. பிராவோ 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். புனே தரப்பில் முருகன் அஷ்வின்‌ 2 விக்கெட்டுகளை‌ வீழ்த்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close