[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
விளையாட்டு 21 Nov, 2017 01:55 PM

இதுதான் யோ-யோ டெஸ்ட்: ரகசியம் உடைத்தார் நெஹ்ரா!

ashish-nehra-explains-details-of-yo-yo-test

இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே பீதியை கிளப்பி வருகிறது யோ-யோ டெஸ்ட். இதில் வென்றால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை. டாப் பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த தகுதி சோதனையில் வெற்றி பெற முடியாததால் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளனர். ’அப்படி என்னய்யா அந்த டெஸ்ட்?’ என்று கிரிக்கெட் ரசிகர்களும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில், யோ-யோ டெஸ்ட் என்ன என்று விளக்கம் அளித்திருக்கிறார் நெஹ்ரா. 

இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்த நெஹ்ராவிடம் வீரேந்திர சேவாக், அந்த டெஸ்ட் பற்றி கேட்டார். அப்போது நெஹ்ரா கூறும்போது, ‘2001-2002 -ம் ஆண்டுகளில்  இந்திய கிரிக்கெட் அணி நடத்திய பிளிப் டெஸ்ட் போன்றதுதான் இதுவும். அதாவது 20 மீட்டர் தூரத்தை, குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் வைத்திருக்கிற புள்ளிக்குள் சென்று திரும்ப வேண்டும். அதற்கு இந்திய அணி 16.1 என்ற புள்ளியை நிர்ணயித்துள்ளது. இதற்கு மேல் எடுப்பவர்கள், இந்த தகுதி தேர்வில் வென்றவர்கள்.  இந்தப் புள்ளி, விரைவில் 16.5 ஆக மாற்றப்பட இருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 18 என இந்த புள்ளியை வைத்திருக்கிறது. அதனால் வீரர்கள் வேகமாக ஓடப்பழக வேண்டும். ஹர்திக் பாண்ட்யா 19 புள்ளிகளும், நான் 18.5 புள்ளிகளும், மணீஷ் பாண்டே 19 புள்ளிகளும் எடுத்தோம். எனக்கு இது எளிதாக இருந்தது. ஏனென்றால் நான் பந்துவீச்சாளர். அதோடு எனக்கு ஓடுவது பிடிக்கும். யுவராஜ் சிங் போன்ற வீரர்களுக்கு இந்த டெஸ்ட் கடினமாக இருக்கிறது . விராத் கோலி எத்தனை புள்ளிகள் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close