[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லையே...இத்தாலி கால்பந்து தலைவர் ராஜினாமா!

carlo-tavecchio-resigns-as-figc-president-after-italy-s-world-cup-failure

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறாததை அடுத்து, இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச்சுற்றின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை. பிளேஆஃப் சுற்றில் வெற்றி பெற்றால்தான் தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

அதன்படி இத்தாலி அணி பிளேஆஃப் சுற்றில் ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் யார் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை. இதில் இத்தாலி தோல்வியடைந்தது. இதனால் உலகக்கோப்பைக்கு இத்தாலி அணி தகுதி பெறாமல் போனது. 60 ஆண்டுகளில் இத்தாலி அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் இருப்பது முதன்முறையாக அமைந்தது.

இதற்கு பொறுப்பேற்று இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கார்லோ டாவிச்சியோ பதவி விலகியுள்ளார். ஏற்கனவே பயிற்சியாளரை நீக்கிய டவேச்சியோ தாமும் ராஜினாமா செய்தார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close