[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
விளையாட்டு 20 Nov, 2017 01:27 PM

சதத்தை நோக்கி கோலி: இந்திய அணி விக்கெட்டுகள் சரிவு!

india-lead-by-196-runs-with-3-wickets-remaining

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 4வது நாளான நேற்று இந்திய அணி, தனது 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 73 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஷிகர் தவான் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 122 ரன் முன்னிலையை அந்த அணி பெற்றது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில் இந்திய அணி 49 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

இன்று காலை போட்டித் தொடங்கியதும் 79 ரன் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் போல்டானார் ராகுல். புஜாரா (22) வும் லக்மல் பந்துவீச்சில் பெரேராவில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்து வந்தார் கேப்டன் கோலி. அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மறுமுனையில் ரஹானே (0), ஜடேஜா (9), அஸ்வின் (7) சாஹா (5) என வருவதும் போவதுமாக இருந்தனர்.  கோலியும் புவனேஷ்வர் குமாரும் (7 ரன்) களத்தில் உள்ளனர். நண்பகல் 1.18 மணி நிலவரப்படி, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 86 ரன்களுடன் செஞ்சுரியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இந்திய அணி 198 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close