[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
விளையாட்டு 19 Nov, 2017 05:42 PM

6 ரன்னில் சதத்தை தவறவிட்டார் தவான்

bad-light-brings-day-4-to-an-early-finish-as-india-end-on-171-1-thanks-to-half-centuries-from-kl-rahul-and-shikhar-dhawan-they-lead-by-49-runs-heading-into-the-final-day

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். சிறப்பாக விளையாடிய தவான் 6 ரன்னில் சதத்தை நழுவவிட்டார்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. புஜாரா மட்டும் நிலைத்து நின்று 52 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 294 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹெராத் (67), மேத்யூஸ் (52), திரிமன்னே (51) ஆகியோர் அரை சதம் எடுத்தனர்.

இதனையடுத்து 122 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர்கள் தவான், கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி 24 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ராகுல் 65 பந்துகளிலும், தவான் 74 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னர் தவான் அதிரடியாக விளையாடினர். இரண்டு சிக்ஸர்களையும் விளாசினார். அதிரடியாக விளையாடிய தவான் 116 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தபோது ஷானகா பந்துவீச்சில் அவுட் ஆகி 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.

                                         

வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 73, புஜாரா 2, ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 4.32 ரன் ரேட்டில் விளையாடியுள்ளது. இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close