[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
  • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
  • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
விளையாட்டு 18 Nov, 2017 11:42 AM

டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 172-க்கு சுருண்டது இந்திய அணி!

lower-order-drags-india-to-172-lakmal-takes-four

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி நண்பகலில்தான் தொடங்கியது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. லக்மல் வீசிய முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து தவான், கோலி ஆகியோரும் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. இதில், ரஹானே, அஸ்வின் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்துவீசப்பட்டன. 

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிலைத்து நின்று ஆடிய புஜாரா, 52 ரன்களிலும் சாஹா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா (29), புவனேஷ்வர் குமார்(13), ஷமி (24), உமேஷ் யாதவ் (6) ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஷனகா, காமேஜ், பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close