[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
விளையாட்டு 16 Nov, 2017 01:22 PM

முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சு

sri-lanka-won-the-toss-and-elected-to-field

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்குவதாக இருந்தது. அங்கு மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காலை 9.20 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி தள்ளி வைக்கப்பட்டது. வீரர்களும் ரசிகர்களும் காத்திருந்தனர். பின்னர் 1 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமால், பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

மழை காரணமாக பிட்ச்சின் தன்மை மாறியுள்ளது. முதல் இரண்டு நாள் பேட்டிங்கிற்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘முதல் இரண்டு நாள் பேட்டிங்கிற்கு இந்த பிட்ச் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும் நாங்கள் 5 பேட்ஸ்மேனோடு களமிறங்குகிறோம். அதனால் சிறப்பாக ஆடுவோம்’ என்றார்.
காயத்தில் இருந்து அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

வீரர்கள் விவரம்:
விராத் கோலி, கே.எல்.ராகுல், தவான், புஜாரா, ரஹானே, சாஹா, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close