[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
விளையாட்டு 16 Nov, 2017 07:44 AM

என் தோலை சீவினாலும் ரத்தம்தான் வடியும்: விராத்

i-do-need-a-rest-i-m-not-a-robot-kohli

'என் தோலை சீவினாலும் ரத்தம்தான் வடியும்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, 
’இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு தொடரும் எங்களுக்கு முக்கியமானது. இதில் பாகுபாடு இல்லை. எதிரில் எந்த அணி ஆடினாலும் வெற்றி மட்டுமே எங்கள் குறிக்கோள். எனது ஓய்வு பற்றி கேட்கிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் 11 பேர் விளையாடுகிறோம். ஆனால், ஒரு நாள் போட்டியில் எல்லோரும் 45 ஓவர் வரை நின்று விளையாடுவதில்லை. அதே போல டெஸ்ட் போட்டியில் 35 ஓவர்கள் யாரும் பந்துவீசுவதில்லை. இருந்தாலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தேவை.  
 எனக்கும் அப்படித்தான். எனக்கும் ஓய்வு தேவை. நான் ஒன்றும் ரோபோ இல்லையே. எனது தோலை சீவினாலும் ரத்தம்தான் வடியும். புஜாரா போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் களத்தில் நிற்பார்கள். அதற்காக யாரையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. வெவ்வேறு சீதோஷ்ணநிலையில் வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடும் போது வீரர்களுக்கு ஓய்வு தேவை. யார் களத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து, அதற்கு ஏற்ப அணி நிர்வாகம் ஓய்வு அளிக்க வேண்டும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close