[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

உலகக் கோப்பை கால்பந்து: இத்தாலிக்கே இடமில்லை

italy-disqualified-from-football-world-cup

60 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தாலி அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறாமல் தவறவிட்டுள்ளது.

உலக கால்பந்து அணிகளில் மிகவும் முன்னணி நாடாகத் திகழ்வது இத்தாலி. இத்தாலியை கால்பந்து போட்டியில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக கால்பந்து உலக கோப்பை போட்டிகள் என்றாலே இத்தாலி அணி விஸ்வரூபம் எடுத்துவிடும். எனவே உலக கோப்பை போட்டிகளில் இத்தாலியை வெற்றி பெருவது பெரும் கடினமாகும். கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் 1934, 1938, 1982 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இத்தாலி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இத்தகைய புகழுடைய இத்தாலி அணி இந்தாண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உலககோப்பைக்கு இத்தாலி தகுதி பெறாமல் தவறவிட்டது இதுவே முதன்முறையாகும். ஸ்வீடன் அணியுடனான தகுதிச் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் கோலின்றி சமன் செய்ததையடுத்து, இத்தாலி அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதல் லெக் ஆட்டத்தில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றிருந்த ஸ்வீடன் அணி, உலகக்கோப்பை போட்டியில் தங்கள் இடத்தை உறுதிசெய்துகொண்டது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close