[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 14 Nov, 2017 09:46 AM

தினேஷூக்கு ரவி சாஸ்திரி சொன்ன அட்வைஸ்!

ravi-shastri-s-timely-advice-has-helped-me-dinesh-karthik

இந்திய கிரிக்கெட் அணியில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு கடும் போட்டி நிலவுகிறது. டெஸ்ட் போட்டிகளில் விருத்திமான் சஹா ஆடிவருகிறார். ஒரு நாள்  மற்றும் டி20 போட்டிகளில் தோனிக்குப் பிறகு, சஞ்சு சாம்சன், ரிஷாப் பன்ட் ஆகியோர் கியூவில் இருக்கிறார்கள். பார்த்திவ் பட்டேலும் இந்திய தேர்வுக் குழுவினரின் லிஸ்டில் இருக்கிறார்.

இதற்கிடையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் அந்த லிஸ்டில் இருக்கிறார். தற்போது ஒரு நாள் போட்டிகளில், பேட்ஸ்மேனாக ஆடி வரும் அவர், 4 வீரராக களமிறங்கி தன்னை நிரூபித்து வருகிறார். அவர் பார்ம் நன்றாக இருப்பதால் 4 வது வீரராகத் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘4வது வீரராக அணியில் நான் தொடரலாம். ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அதிக அழுத்தம் ஏற்படும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான விளையாடினேன். வாய்ப்புக் கிடைத்தால் மற்றப் போட்டிகளிலும் அப்படியே தொடர்வேன். எனது பேட்டிங் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் நீண்ட நேரம் விவாதித்தேன். சில ஏரியாவில் எனது பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுரை சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். அது எனக்கு உதவியது. விராத் கோலி போன்றவர்களின் தலைமையில் விளையாடுவது சிறப்பானது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close