[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 12 Nov, 2017 02:07 PM

ஓய்வா, நானா? விமர்சனங்களுக்கு தோனி பதில்

ms-dhoni-responds-to-calls-for-his-ouster-from-t20-team

டி20 போட்டியில் இருந்து, தற்போது ஓய்வு பெறும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சரியாக ஆடவில்லை என்று கூறி, அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். அகர்கர், லட்சுமண், ஆகாஷ் சோப்ரா போன்றோர், ’ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தொடரலாம், ஆனால் டி20 போட்டிகளில் மற்றவருக்கு தோனி வழிவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தோனிக்கு, கேப்டன் விராத் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துபாயில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது மதிக்கப்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் நானும் ஓர் அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். நீங்கள் 15 வருடம் விளையாடலாம், இருபது வருடம் விளையாடலாம். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் இந்திய நாட்டின் பிரதிநிதியாக விளையாடுகிறோம் என்பதில்தான் பெருமை இருக்கிறது. நான் எப்போதுமே முடிவுகளை விட செயல்முறைகளையே நம்புகிறேன். முடிவுகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. எது சரி என்று எனக்குப் படுகிறதோ அதைத்தான் செய்து வருகிறேன்.  ஒரு போட்டியில் 10 ரன்கள் தேவையா, 15 ரன்கள் தேவையா என்பதை  பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் சரியாக செயல்படுகிறோமா என்பதை மட்டுமே பார்க்கிறேன். டி20 ஓவர் போட்டியில் இருந்து தற்போது ஓய்வு பெறும் திட்டமில்லை’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close