[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
விளையாட்டு 12 Nov, 2017 11:14 AM

38 வயசுல சச்சின் ஆடியபோது ஏதும் சொன்னீர்களா? தோனிக்கு ஆதரவாக கபில் வாய்ஸ்!

kapil-dev-support-ms-dhoni

’38 வயதில் உலகக் கோப்பையை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய போது ஏதும் பேசாதவர்கள் இப்போது தோனிக்கு எதிராக ஏன் பேச வேண்டும்?’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்று கூறி அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். அகர்கர், லட்சுமண், ஆகாஷ் சோப்ரா போன்றோர், ’ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தொடரலாம், ஆனால் டி20 போட்டிகளில் மற்றவருக்கு அவர் வழிவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தோனிக்கு, கேப்டன் விராத் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 1983-ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனுமான கபில்தேவ் கூறும்போது, ’ஏன் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். வயது பிரச்னை இல்லை. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் ஆடிய போது அவருக்கு வயது 38. அப்போது யாரும் கேள்வி கேட்காதபோது இப்போது ஏன் கேட்க வேண்டும்? தோனியை அணியில் இருந்து நீக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரைச் சேர்ப்பீர்கள்? தோனியின் திறமை இந்திய அணிக்கு முக்கியம். ஹர்திக் பாண்ட்யா பற்றி கேட்கிறார்கள். பாண்ட்யாவிடம் திறமை இருக்கிறது. அவர் என்னைவிட சிறந்த வீரராக வருவார். அவர், அவரது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்’ என்றார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close