[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக, குடிநீரை வீணடிக்கப் போவதில்லை: மும்பை கிரிக்கெட் சங்கம்

sewage-water-will-be-used-to-maintain-ipl-pitches-bcci-tells-bombay-high-court

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக, குடிநீரை வீணடிக்கப் போவதில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கு தடைகோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் , மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் புனேவில் நடைபெறவுள்ள 17 போட்டிகளில், மைதான பராமரிப்புக்காக குடிநீரை பயன்படுத்தப் போவதில்லை என மும்பை கிரிக்கெட் சங்கம் உறுதி அளித்துள்ளது

R.W.I.T.C. நிறுவனம், ‌கழிவுநீரை சுத்திகரித்து வழங்க உள்ளதாகவும், அதையே மைதானப் பராமரிப்புக்கு பயன்படுத்த இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவும் சூழலில், ஐபிஎல் போட்டிகளுக்காக மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close