[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

டி20 கிரிக்கெட் தரநிலையில் நியூசிலாந்து அணிக்கு சரிவு

india-s-win-tonight-means-pakistan-are-clear-on-top-of-the-world-wide-t20i-rankings

இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்திருந்த நிலையில் டி20 போட்டிகள் நடைப்பெற்று வந்தன.  இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்திருந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைப்பெற்றன. மழையின் காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இந்திய அணிக்கு எதிரான டி-20 தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், 20 ஓவர்‌ கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை இழந்தது. 125 புள்ளிகளுடன் முதலிடம் வகித்த நியூசிலாந்து அணி, தற்போது 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.‌ நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றபோதிலும், 119 புள்ளிகளுடன் இந்தி‌ய அணி தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close