[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
  • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
விளையாட்டு 02 Nov, 2017 01:29 PM

பாண்ட்யா பிடித்த அந்த கேட்ச்: சிலிர்க்கிறார் கோலி

rohit-and-shikhar-were-outstanding-virat-kohli

’நியூசிலாந்து வீரர் குப்தில் அடித்த பந்தை ஹர்திக் பாண்ட்யா பிடித்த கேட்ச், நான் பார்த்த வகையில் சிறந்தது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார். 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்த அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் நடக்க இருக்கிறது. முதல் டி20 போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, வெற்றி பெற்றது. 

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் விராத் கோலி, ’இந்த விக்கெட் கடினமான ஒன்று. இருந்தும் ரோகித்தும் தவானும் சிறப்பாக விளையாடினர். அணியின் ஒட்டு மொத்த பங்களிப்பில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். எங்கள் பந்துவீச்சும் பீல்டிங்கும் கூட சிறப்பாக இருந்தது. குப்தீலை, ஹர்திக் பாண்டியா பிடித்த கேட்ச், நான் பார்த்த வகையில் சிறந்தது. ஒரு நாள் போட்டிகளில் தவான் சிறந்த வீரர். டி20 போட்டியிலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக விளையாடுகிறார். 20 ஓவர் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெறுவது முக்கியம். அதற்கு ஏற்ற மாதிரிதான் வீரர்கள் தேர்வும் இருக்கும். பாண்ட்யாவை 6 வது வீரராகவும் அக்‌ஷர் படேலை 7 வது வீரராகவும் வைத்திருந்தது அப்படித்தான். இந்தப் போட்டியுடன் ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெற்றுள்ளார். அவர் சிறந்த வீரர். 19 வருடமாக அணியில் இருப்பது கடினமானதுதான்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது, ‘அனைத்து வகையிலும் எங்கள் செயல்பாடு மோசமாக இருந்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close