[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தப்பிப் பிழைத்த தவான், ரோகித் சாதனை: வரலாற்றை மாற்றினார் கோலி

rohit-dhawan-break-both-records-and-new-zealand

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. டி20 போட்டியில் இதுவரை நியூசிலாந்தை வென்றதில்லை என்ற வரலாற்றை, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று மாற்றியது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்த அணிகளுக்கு இடையே மூன்று  டி20 போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் முதல் டி20 போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, இந்திய வீரர்கள் தவானும், ரோகித்தும் இணைந்து முதல் விக்கெட்டு 158 ரன்கள் குவித்தனர். டி20 கிரிக்கெட்டில், இந்திய ஜோடி 150 ரன்களுக்கு மேல் குவித்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் ரோகித்தும் விராத் கோலியும் இணைந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 2 வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்தது.

தவான் 8 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை நியூசிலாந்தின் சான்ட்னரும், ரோகித் சர்மா 16 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய கேட்ச்சை சவுதியும் கோட்டை விட்டனர். இதையடுத்து இருவரும் தலா 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close