[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

ஆட்டோ-பைலட் மோடில் கோலி: புகழ்கிறார் நெஹ்ரா

virat-kohli-is-auto-pilot-mode-right-now-nehra

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ஆட்டோ-பைலட் மோடில் இருக்கிறார் என்று வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, நாளை நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியோடு ஓய்வு பெறுகிறார். 
இந்திய கிரிக்கெட் அணிக்காக 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டி, 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஓய்வுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிஷ் நெஹ்ரா, கூறும்போது, ’கிரிக்கெட்டில் எனது 20 வருட பயணம் இனிமையானது. ஆனால் ஒரே ஒரு வருத்தம் உண்டு. அது, 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை பைனலில் தோற்றது. அந்தப் போட்டியில் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி என் வாழ்வில் எல்லாமே விதிப்படி நடந்தது. எல்லோரும் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டுவந்து விளையாடுகிறார்கள். நான் விளையாடிக் கொண்டே கற்றுக்கொண்டவன். டெல்லி கோட்லா மைதானத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில்தான் என் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. ராமன் லம்பா, அஜய் சர்மா, அதுல் வாசன், ராபின் சிங் ஆகியோருடன் விளையாடியதை மறக்க முடியாது. அதோடு அஜய் ஜடேஜா, தோனியுடன் ஆடியதையும் மறக்க முடியாது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுடன் இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவர் பிரியாணியை கிச்சடியாக மாற்றுவார். ஜூனியர்களுக்கு அவர் பயங்கர பயிற்சியாளராக இருந்திருப்பார் என நினைக்கிறேன். ஆனால், கேரி கிறிஸ்டன் சிறந்த பயிற்சியாளராக இருந்தார். போட்டிக்கு முன் கேப்டன் தோனியிடம் ஆலோசனை நடத்துவார். ஆனால், களத்துக்குள் எதிலும் தலையிடமாட்டார்.

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராத் கோலி, ஆட்டோ-பைலட் மோட்-ல் இருக்கிறார். என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே செய்கிறார். அவருக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆலோசனை முக்கியமானதாக இருக்கிறது. எந்த வீரரையும் நம்பிக்கையளித்து சிறந்த வீரராக மாற்றுபவர் ரவி சாஸ்திரி. ஓய்வுக்கு பின், இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் எண்ணமில்லை’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close