[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
விளையாட்டு 30 Oct, 2017 09:42 AM

ஒவ்வொரு செஞ்சுரியும் ஸ்பெஷல்தான்: ரோகித் மகிழ்ச்சி

every-hundred-is-special-rohit-sharma

‘ஒவ்வொரு செஞ்சுரியும் ஸ்பெஷல் என்பதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

நியூசிலாந்து அணியுடனான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா நேற்று வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் விராத் கோலி 113 ரன்களும், துணைக் கேப்டன் ரோகித் சர்மா 147 ரன்களும் குவித்தனர். ரோகித்துக்கு இது 15-வது சதம். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

பிறகு ரோகித் கூறும்போது, ’அணி வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு எனது பங்களிப்பும் சிறப்பாக இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் நாங்கள் நன்றாக விளையாடினோம். நியூசிலாந்து அணி எங்களுக்கு சவாலானதாக இருந்தது. எளிதாக நாங்கள் வெற்றிபெற அந்த அணி விடவில்லை. கான்பூர் போட்டியில் நான் ரசித்து ஆடினேன். தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பான நினைவுகள் வந்தன (இதே மைதானத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 150 ரன்கள் குவித்திருந்தார் ரோகித்). ஒவ்வொரு செஞ்சுரியும் ஸ்பெஷலானதுதான். ஆனால் கடுமையான பயிற்சிக்கு பின் இந்த சதம் கிடைத்ததால் எனக்கு மகிழ்ச்சி. என் பேட்டிங் வலுப்பெற பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் ஆலோசனையும் பங்களிப்பு உதவியாக இருந்தது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close