’இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அணி. வெற்றிக்கான தகுதி அந்த அணிக்கு இருக்கிறது’ என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறினார்.
நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தொடரை இழந்த பின் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ‘இது எங்களுக்கு சிறப்பான தொடராக அமைந்தது. நாங்கள் நன்றாக விளையாடினோம். இருந்தாலும் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றிருக்கிறது. இதற்கான பெருமை விராத் கோலியின் அணிக்குத்தான் சேரும். இந்திய அணி சிறந்த அணி. வெற்றிக்கான தகுதி அந்த அணிக்கு இருக்கிறது. வெற்றியை நெருங்கி வந்து தோற்றது கொஞ்சம் எரிச்சலை தந்தது. இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடியது. லாதம் அருமையாக பேட்டிங் செய்தார். டாஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸும் நன்றாக ஆடினர். கடுமையான சூழ்நிலையிலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர்.
பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் வேண்டும் - திருமாவளவன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் ! இந்திய வீரத்தை மெச்சும் "கேசரி" டிரைலர்
புல்வாமா தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?