[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கிரீன்பார்க்கில் இதுதான் பர்ஸ்ட்: வெல்லுமா இந்தியா?

green-park-hosts-1st-day-night-odi

இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி கான்பூரில் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் முதல் பகலிரவு போட்டி இது.

இன்று மதியம் ஒன்றரை ம‌ணியளவில் போட்டி தொடங்குகிறது. 6 தொடர்களை அடுத்தடுத்து கைப்பற்றியுள்ள சாதனையை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்யுடன் நியூசிலாந்து அணி உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close