[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

மாலிக் அதிரடி: இலங்கை மீண்டும் பரிதாபம்

pakistan-vs-sri-lanka-1st-t20-pak-win-by-7-wickets

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை பாகிஸ்தானிடம் இழந்தது. இந்த அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, அபுதாபியில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால், இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். அதிகப்பட்சமாக, சமரவிக்ரமா, பிரசன்னா ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் அந்த அணி, 18.3 ஓவர்களில் 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சோயிப் மாலிக் 42 ரன்களும் ஹபீஸ் 25 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

கடைசி டி20 போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் நடக்க இருக்கிறது. அங்கு சென்று விளையாட இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மறுத்துவிட்டதால், அவர்கள் டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இதையடுத்து இரண்டாம் நிலை வீரர்களை கொண்டு இலங்கை அணி விளையாடி வருகிறது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close