[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ்-திமுக இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - குஷ்பு
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு

புரோ கபடி லீக்கில் இன்று முக்கியமான ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

pro-kabaddi-2017-patna-pirates-stun-puneri-paltan-to-face-bengal-warriors-in-second-qualifier

புரோ கபடி லீக் தொடரின் இரண்டாவது தகுதிப் போட்டியில் பாட்னா பைரட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் சென்னையில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை நேரு விளையாட்டரங்கில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, நாளை மறுதினம் சாம்பியன் பட்டத்திற்காக நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. நடப்பு தொடரில் பாட்னா பைரட்ஸ் அணியுடன் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ள பெங்கால் வாரியஸ் அணி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. எனவே இன்றைய போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ‌ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் 42-17 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்ற குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அடுத்து நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 42-32 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடக்கும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, சென்னையில் நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close