[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
விளையாட்டு 25 Oct, 2017 05:27 PM

2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு

new-zealand-230-9-in-50-overs-teamindia-need-231-runs-to-win-the-2nd-odi

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

டாஸ்வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்தில் நியூசிலாந்து முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 58 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், லாதம் மற்றும் நிகோல்ஸ் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், லாதம்ஸ்(38), நிகோல்ஸ்(42) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், கிரண்ட் ஹோம்மி அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். 231 என்ற இலக்கை இந்திய அணி எளிதில் அடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close