[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
 • BREAKING-NEWS டெஸ்ட்போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் புஜாரா
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியில் இருந்து 1,384 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியா அருகே நியூகலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
 • BREAKING-NEWS போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் புதுச்சேரியில் 3ஆவது நாளாக அரசுப்பேருந்துகள் இயங்கவில்லை
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: வந்தவாசி, தென்னாங்கூர், மருதநாடு, மும்முனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
 • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
 • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
 • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
விளையாட்டு 25 Oct, 2017 09:02 AM

புரோ கபடி: இறுதிபோட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளப்போவது யார்?

pro-kabaddi-league-who-face-gujarath-in-finals

புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

5வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இந்த அணியை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் விளையாடும் அணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பெங்கால் வாரியர்ஸ் அணி இறுதிபோட்டிக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு உள்ளது. முதல் தகுதிச்சுற்றில் அந்த அணி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதி சுற்றில் ஆடும் வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம்.

நேற்று நடைப்பெற்ற மூன்றாவது நாக் அவுட் சுற்று போட்டியில் புனேரி பல்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 42 - 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதிசுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் நாளை நடைபெறவுள்ள தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close