[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

இந்தியா பேட்டிங்: பாண்டேவுக்குப் பதில் தினேஷ் கார்த்திக்!

india-won-the-toss-dinesh-karthik-replaces-manish-pandey

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதால் இந்திய அணி, அதிக ரன்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடும் லெவனில் மணீஷ் பாண்டேவுக்குப் பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 4-வது வீரராக களமிறங்குவார். 
இந்திய அணி விவரம்: 

விராத் கோலி, தவான், ரோகித், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சாகல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close