[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

கோலி இருக்கும் போதே கேப்டனாக செயல்படும் தோனி: ரகசியத்தை கூறுகிறார் சாஹல்

this-is-how-ms-dhoni-becomes-captain-with-virat-kohli-still-on-the-field-chahal

விராட் கோலி கேப்டனாக இருக்கும் போதே மகேந்திர சிங் தோனி எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் கூறியுள்ளார். 

இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பிறகும், தோனியின் ஆலோசனைகளை களத்தில் அவ்வவ்போது பெற்று வருகிறார். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது போட்டிகளில் தெரிகிறது. ஒரே அணிக்கு இரண்டு கேப்டன்கள் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு சாஹல் அளித்த பேட்டியில், தோனி தான் இன்னும் எங்களது கேப்டனாக இருக்கிறார் என்று சாஹல் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், “சில நேரங்களில், கோலி எல்லைக் கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்யும் போது, எங்களுக்கு சில ஆலோசனைகள் தேவைப்படும். அந்த நேரத்தில், கோலி அருகில் வந்து ஆலோசனை செய்வது இயலாததாக இருக்கும். அப்போது தோனி அதனை மேற்கொள்வார். 

அப்போது, தோனி, கோலிக்கு சைகை மூலம், நீங்கள் அங்கேயே இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார். இதனால் நேரம் மிகவும் மிச்சமாகும். தோனி எப்பொழுதும் அணுகக் கூடியவராக இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகி விட்டார் என்று தெரியும். இருப்பினும் அவர் எப்பொழுதும் எங்களது கேப்டனாக இருப்பார். பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணிக்க அவருக்கு தெரியும். அவர் எப்படி இதனை செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் கூறுவதை நான் அப்படியே செய்கிறேன். விக்கெட்டுகள் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close