[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

எனக்கு மட்டும் தனிச்சட்டமா? ஆவேசப்பட்ட ஸ்ரீசாந்த்

sreesanth-about-kerala-highcourt-judgement

கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனிநீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, மோசமான முடிவு என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளிகளை யார் தண்டிப்பது என்றும், தனக்கு மட்டும் தனிச்சட்டமா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தடை நீங்கியது மட்டும் எப்படி என்கிற வகையிலும் ஸ்ரீசாந்த் வினா எழுப்பியுள்ளார். இவ்வாறு தமது ஆதங்கத்தை டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close