சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து அணி, தங்களது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றது. இதனையடுத்து அயர்லாந்து அணி, தங்களது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஆக்லாந்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கையெழுத்தானது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் டப்ளின் நகரில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- அயர்லாந்து அணிகள் மோதயிருக்கும் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'நீதிபதிகளை மிரட்டும் விளையாட்டில் காங்கிரஸ்': அருண் ஜேட்லி விமர்சனம்
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்