[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
விளையாட்டு 12 Oct, 2017 08:43 AM

’யோ-யோ’வில் அஸ்வின் பாஸ்!

ashwin-passes-the-yo-yo-test

யோ- யோ டெஸ்ட்டில் பாஸ் ஆகிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பீதியை கிளப்பி வருகிறது யோ- யோ என்ற உடல் தகுதி டெஸ்ட். இதில் பாஸ் பண்ணினால் மட்டுமே அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியே, இந்த டெஸ்ட்டில் ஜஸ்டில்தான் பாஸ் செய்திருக்கிறாராம். சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் இந்த டெஸ்டில் தோல்வியடைந்ததால், அணியில் இடம்பெறமுடியாமல் உள்ளனர். அதே நேரம் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா, இதில் பாஸாகி, இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான, டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சோதனையில், தான் வென்றுள்ளதாக சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை. அவருக்கும் ஜடேஜாவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 
இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாடி வரும் அஸ்வின், கடந்த செவ்வாய்க்கிழமை, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு நடந்த யோ- யோ உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்டு வென்றுள்ளார். இத்தகவலை அவரே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டிகளில் அவர் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close