[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
விளையாட்டு 12 Oct, 2017 08:13 AM

ஓய்வு பெறுகிறார் ஆசிஷ் நெஹ்ரா!

nehra-to-quit-after-kotla-t20

இந்திய கிரிக்கெட் வீரர் ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. 38 வயதான இவர், 1999-ம் ஆண்டு முகமது அசாருதீன் கேப்டன்ஷிப்பில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
அணியில் இடம்பெறாமல் இருந்த நெஹ்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறது. இந்த அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி நடக்கிறது. அந்தப் போட்டியில் சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராத் கோலி ஆகியோருக்கும் தெரிவித்து விட்டார். அவர் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட இருப்பாதாக கூறியிருந்தார் நெஹ்ரா. ஆனால் ஆஸ்திரேலிய டி20 போட்டியில் அவரை அணியில் சேர்க்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close