[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் இலங்கை வெற்றி

srilanka-won-the-test-match-against-pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. 

பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி துபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 482 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் திமுத் கருணரத்னே அதிகபட்சமாக 196 ரன்கள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை சார்பில் ரங்கானா மற்றும் தில்ருவன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

2வது இன்னிங்ஸின் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி மளமளவென அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 96 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் வாஹப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் தில்ருவன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார். இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என்ற விகிதத்தில் தொடரையும் கைப்பற்றியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close