[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
விளையாட்டு 08 Oct, 2017 12:11 PM

தோனி வளர கங்குலியின் தியாகம்தான் காரணம்: சேவாக்

ganguly-s-sacrifice-made-ms-dhoni-the-cricketer-he-is-today-sehwag

தோனி, இந்தளவுக்கு இன்று வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் தியாகம்தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறினார்.

கங்குலி கேப்டனாக இருந்த போது, 2004-ல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் தோனி.  மூன்றாவது வீரராக களமிறங்கிய தோனி, அந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்களும், இலங்கைக்கு எதிரான 183 ரன்களும் குவித்து தன்னை நிரூபித்தார். 

இதுபற்றி வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘ அப்போது பேட்டிங் ஆர்டரில் பரிசோதனை முயற்சி செய்தோம். நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப் கிடைத்தால், சவுரவ் கங்குலி 3 வது இடத்தில் இறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காததால், இர்பான் பதான் போன்றோரை அந்த இடத்தில் விளையாட வைத்தோம். அப்போது கங்குலி, இரண்டு மூன்று போட்டிகளில் தோனியை மூன்றாவது வீரராக களமிறக்கினார். சில கேப்டன்கள் மட்டுமே தங்கள் இடத்தை எனக்கோ, தோனிக்கோ விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். கங்குலி, தோனிக்கு அவர் இறங்கும் 3 வது இடத்தை விட்டுக் கொடுத்திருக்காவிட்டால், தோனி பெரிய வீரராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. அது அவரது தியாகம். அவர் தொடர்ந்து அப்படி கொடுத்து வந்தார். அதோடு இளம் வீரர்களை கங்குலி அதிகமாக நம்பினார். அவரைப் போலவே, அடுத்து கேப்டனாக வந்த ராகுல் டிராவிட், தோனியை ஒரு முழுமையான கிரிக்கெட்டராகவும் சிறப்பாக ஆட்டத்தை முடிப்பவராகவும் மாற்றினார். சில ஆட்டங்களில் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து அவுட் ஆனார் தோனி. அப்போது டிராவிட் தோனியிடம் கடுமையாக நடந்துகொண்டார். இதையடுத்து தனது ஆட்டத்தை மாற்றிய தோனி, ஆட்டத்தை சிறப்பாக முடிப்பவராக மாறினார். அந்த காலகட்டத்தில் தோனி-யுவராஜ் சிங் பார்ட்னர்ஷிப், மறக்க முடியாதது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close