[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
விளையாட்டு 07 Oct, 2017 07:34 AM

டி 20 கிரிக்கெட்: சொந்த ஊரில் சாதிப்பாரா தோனி?

will-dominate-local-hero-dhoni-today

சொந்த ஊரில் இன்று நடக்கும் டி20 போட்டியில் தோனி, அதிரடி காட்டுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, 4-1 என்ற கணக்கில் இந்தியா
கைப்பற்றிவிட்டது. இதனால் டி20 தொடரை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. 
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத தவான் அணிக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஏற்கனவே, ரோகித் சர்மா, பாண்ட்யா, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் அதிரடி காட்டி வருவதால் இந்திய அணி வலுவாகவே உள்ளது. அதோடு போட்டி நடைபெறும் ராஞ்சி, கூல் தோனியின் சொந்த ஊர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் இங்கு ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிடுவார் என எதிர்பார்க்கின்றனர். பந்து வீச்சில் சாஹர், குல்தீப், புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அணிக்கு திரும்பியிருக்கிற நெஹ்ரா, கடைசி கட்ட ஓவர்களில் நன்றாக வீசுவார் என்பதால் அதுவும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி, வார்னர், பிஞ்ச், கேப்டன் ஸ்மித் ஆகியோரை அதிகமாக நம்பி இருக்கிறது. மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணியால் நிமிர முடியவில்லை. இந்நிலையில் அந்த அணிக்கு 5 வீரர்கள் வருகை தந்துள்ளது சாதகமாக இருக்கும் என நம்புகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close