[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ராகுல் டிராவிட்டுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு: பிசிசிஐ தீவிரம்

bcci-keen-to-rope-in-rahul-dravid-as-head-coach-of-india

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை நியமிப்பதில் பிசிசிஐ தீவிரமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ஜூனியர் அணி மற்றும் இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக கடந்த ஓராண்டாக நீடித்து வரும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை, இந்திய சீனியர் அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் மேலாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், முழுநேர பயிற்சியாளாரைத் தேர்ந்த்தெடுக்க பிசிசிஐயின் ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜாம்பவான்களான சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் டிராவிட்டிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close