[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்திய அணியின் எதிர்காலம்: ரோகித் மகிழ்ச்சி!

the-future-is-bright-says-rohit

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 125 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

பின்னர் அவர் கூறும்போது, ‘இந்த தொடர் சிறப்பான ஒன்று. ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அணி, சவாலானது. எதையும் எளிதில் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள். அதனால் அந்த அணியுடன் எப்போதும் ரசித்து ஆடுகிறேன். இந்தப் போட்டியில் சாஹல் விளையாட வில்லை. ஆனால் அக்‌ஷர் சிறப்பாக பந்துவீசினார். குல்தீப்பும் சரியாக பந்துவீசினார். ரஹானே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். இது, இந்த அணியின் ஸ்திரத்தன்மையை சொல்வதாக இருக்கிறது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களுமே தங்கள் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எந்த இடத்தில் எந்த நேரத்தில் இறங்கினாலும் அந்த சவாலை சரியாக வெல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close