[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

கேப்டன் பதவிக்கு லாயக்கற்றவர் அப்ரிடி: பாக். அணியின் மேலாளர் கருத்து

afridi-absolutely-clueless-in-tactics-and-leadership-says-pakistan-team-manager

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு ஷாகித் அப்ரிடி லாயக்கற்றவர் என்று அந்த அணியின் மேலாளர் இன்திகாப் ஆலம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து சூப்பர் டென் தொடருடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்ச்னங்களைச் சந்தித்தது. மேலும், பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக அன்பைப் பெறுவதாக அப்ரிடி கருத்து கூறியதும் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவிடம் அறிக்கை அளித்துள்ள மேலாளர் இன்திகாப் ஆலம், கேப்டனாக இருந்து அணி வீரர்களை வழிநடத்த லாயக்கற்றவர் என்று அற்க்கையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அணியின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்காமல், தேவையற்ற விவாதங்களில் பேசி சர்ச்சையில் அப்ரிடி சிக்கியதாவும் இன்திகாப் ஆலம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close