[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
விளையாட்டு 25 Sep, 2017 08:46 AM

தோனி சாதனையை சமன் செய்த கோலி

virat-kohli-equals-ms-dhoni-s-record-winning-run

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 9  ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று, முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3வது ஒரு நாள் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸி.அணி 50 ஓவர்கள்முடிவில் 293 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 9 ஒரு நாள்  போட்டிகளில் வெற்றி பெற்று தோனியின் முந்தையசாதனையை சமன் செய்தது. 

இதற்கு முன்பு தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது விராத் கோலி சமன் செய்துள்ளார். விராத் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தற்போது ஆஸிக்கு எதிரான தொடரிலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 6வது தொடர் இதுவாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close