[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
 • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
 • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
 • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
 • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
 • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
 • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
விளையாட்டு 23 Sep, 2017 02:14 PM

சண்டையிலும் கோலி வல்லவர்: ஆஸி. வீரர்களுக்கு கிளார்க் எச்சரிக்கை

virat-kohli-plays-10-times-better-when-he-fights-with-people-stuart-clark-warns-australia

இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராத் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல, சண்டையிடுவதிலும் 10 மடங்கு சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடந்தது. இந்தப்போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நடுவே, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வாடே, ஸ்டோயினிஸ் மற்றும் கேப்டன் விராத் கோலி இடையே லேசான வாய்ச் சண்டை ஏற்பட்டது. கோலி 79 ரன்கள் எடுத்திருந்த போது இந்த சண்டை நிகழ்ந்தது. ஸ்டோயினிஸ் வீசிய பந்தை கேதர் ஜாதவ் அடிக்காமல் விட்டார். இந்த பந்து கீப்பர் வாடேயின் கையில்பட்டு நழுவி சென்றது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தனது கையை பிடித்துக் கொண்டு அங்கேயே நின்றுவிட்டார். பந்தை எடுக்கவில்லை. இதனையடுத்து, எதிர்முனையில் இருந்த கோலி வேகமாக ஓடி ரன் எடுத்தார். 

அப்போது தனது கையில் அடிபட்ட நிலையில் கோலி ரன் எடுக்க ஓடுகிறாரே என்ற கோபத்தில், கோலியை பார்த்து வாடே ஏதோ பேசியுள்ளார். அவருக்கு துணையாக ஸ்டோயின்ஸும் இணைந்து கொண்டார். இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது குல்தீப் பந்துவீச்சில் வாடே ஆட்டமிழந்த போது கோலி ஆக்ரோஷமாக சத்தமிட்டார். 

இந்த நிலையில் கோலியுடன் வாக்குவாதம் செய்வதை விடுத்து விளையாட்டின் மீது கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ’ஒரே ஒரு ரன். அது ஒரு பிரச்சனையே இல்லை. என் அணி மீது தான் கவலைப்படுகிறேன். இது ஒரு முட்டாள் தனம்’ என்றார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close