[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

world-cup-t-20-cricket-193-target-to-west-indies

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ்‌ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக் கேப்டன் டேரன் சமி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில், ஷிகர் தவானுக்கு பதிலாக அஜிங்க்ய ரஹானே-வும், காயத்தால் தொடரில் இருந்து விலகிய யுவராஜ் சிங்கிற்கு பதிலாக மணீஷ் பாண்டேவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ரோகித் ஷர்மாவும், அஜிங்க்ய ரஹானே-வும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு ரோகித்-ரஹானே இணை 62 ரன்கள் சேர்த்தது. 31 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மா, பத்ரியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி ரஹானே உடன் கைகோர்த்தார். 15.3 ஓவர்களில் அணியின் ரன் 128 ஆக இருந்த போது ரஹானே பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் தோனியும், விராட் கோலியும் சீரான ரன்கள் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close