[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

வாசிம் அக்ரம் ஆக ஆசைப்பட்ட குல்தீப்!

kuldeep-wanted-become-wasim-akram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சில்தான் ஆர்வம் கொண்டிருந்தார் என்று அவரது இளம் வயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சைனாமேன் வகை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதித்தார். இதையடுத்து அவருக்கு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரிலும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 

குல்தீப் யாதவ், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம் ஆக ஆசைப்பட்டார் என்று அவரது சிறு வயது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டே கூறியுள்ளார். 
‘பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் போல ஆக வேண்டும் என்றுதான் குல்தீப் சிறுவயதில் நினைத்தார். உன்னால் அப்படி ஆகமுடியாது என்று நான் சொன்னதும் கண்ணீர்விட்டு அழுதார். என் மீது கோபப்பட்டார். பிறகுதான் அவர் சுழற்பந்து பயிற்சிக்கு வந்தார். நான் இல்லாதபோது ரகசியமாக வேகப்பந்துவீசி பயிற்சி எடுப்பார். பிறகு ஒரு நாள் அவருடன் அமர்ந்து சுழற்பந்துவீச்சு எப்படி உதவும் என்று எடுத்துச் சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டு பயிற்சி எடுத்தார். இடது கை மணிக்கட்டை பயன்படுத்தி அவர் வீசும் சைனாமேன் வகை பந்துவீச்சை கண்டதும் ஆச்சரியப்பட்டேன். பிறகு அவருக்கு கூக்ளி வகை பந்துவீச்சை பயிற்றுவித்தேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close