[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
விளையாட்டு 22 Sep, 2017 07:48 AM

தோனி ஐடியா... புகழும் ‘ஹாட்ரிக்’ குல்தீப்

kuldeep-consulted-dhoni-before-bowling-hat-trick-ball

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியாவை சேர்ந்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை, இளம் வீரர் குல்தீப் யாதவ் பெற்றார். 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச்சாதனையை அவர் நிகழ்த்தினார். சேட்டன் சர்மா, கபில்தேவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். உத்திரபிரதேசத்தை சேர்ந்த 22 வயது வீரரான குல்தீப் யாதவ், தமது ஒன்பதாவது ஒருநாள் போட்டியில் இந்த ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். 

போட்டிக்குப் பின் பேசிய குல்தீப், ‘முதல் 5 ஓவர்களில் சரியான பகுதியில் பந்து வீச சிரமப்பட்டேன். கிரிக்கெட்டில் இது சஜகம்தான். கடந்த போட்டியில் எனது பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார் மேக்ஸ்வெல். இந்தப் போட்டியில் 3 பந்தில் 3 விக்கெட்டுகளை எடுத்தேன். இது மகிழ்ச்சியாக இருந்தது. இது எனக்கு ஸ்பெஷல். அந்த பந்துகளை வீசுவதற்கு முன்பு, தோனியிடம் எப்படி வீசலாம் என்று கேட்டேன். ’உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வீசு’ என்று ஐடியா சொன்னார். அதையே கடைபிடித்தேன். அதோடு கேப்டன் விராத் கோலியும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். இவர்கள் இருவருக்கும் நன்றி’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close