[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ரோகித் அவுட்: ஆஸி.அணியில் மாற்றம்!

cricket-india-bat-australia-pick-richardson-and-agar

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. வெற்றியைத் தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணியும், தோல்வியில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கி உள்ளன. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு இது, 100ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. 

இந்தப் போட்டியில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜும்பாவுக்கு பதில் அஷ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஃபாக்னருக்கு பதில் கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இந்திய அணியில் மாற்றமில்லை. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி ரஹானேவும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் 7 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரது விக்கெட்டை கோல்டர் நைல் கைப்பற்றினார். கேப்டன் கோலியும் ரஹானேவும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close