[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

மிரட்டுது இடியுடன் கூடிய மழை: இன்றைய போட்டிக்கும் சிக்கல்!

rain-threaten-2nd-oneday

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இன்றையபோட்டிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்தப்போட்டி இந்திய நேரப்படி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது.  முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.
அதே வேளையில் பேட்டிங்‌ மற்றும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித்துக்கு இது 100-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்ததால் வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்  என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இன்றைய ஆட்டமும் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close